Popular Posts

Saturday, February 22, 2014

மக நெகும’ கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்


இலங்கையின் முழு வீதிகள் வலையமைப்பிலிருந்து வருகின்ற 72% வீதமான வீதிகள் கிராமிய வீதிகளாகும். அரசியலமைப்புக்கான 13-வது திருத்தம்1987 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், 2004 ஆம் ஆண்டு வரை மத்திய அரசாங்கத்தினால் நிதியிடப்பட்ட தனியான ஒரு கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் இருக்கவில்லை. 2004 ஆம் ஆண்டில், 213 மில்லியன் ரூபாய் நிதி ஒரு முன்னோடிக் கருத் திட்டத்தின் கீழ் முதலிடப் பட்டிருந்தது. 2005 ஆம் ஆண்டில் கிராமிய வீதிகளின் அபிவிருத்தியின் நிமித்தம் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் பொது வரவு செலவு திட்டத்தின் மூலம் நிதிகளை ஒதுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.


மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் அன்று கௌரவப் பிரதம மந்திரியாகவும் கௌரவ நெடுஞ்சாலைகள் விடய அமைச்சராகவும் தொழிற்பட்ட நேரத்தில் இந்த ‘மக நெகும நிகழ்ச்சி திட்டம்’ 2004 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்டது. இந்த நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், வீதி அபிவிருத்தி அதிகார சபையினது (வீ.அ.அ.ச) நேரடித் தொழிலாளர் படையினூடாக அல்லது கிராம மக்களின் வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்தும் சமுதாய மைய அமைப்புகளின் பங்களிப்பைக் கொண்டு அநேகமான கிராமிய வீதிகள் வாகனங்கள் செல்லக் கூடிய அளவுக்கு சிறந்த முறையில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

கிராமிய வீதி அபிவிருத்திற்கான முதலீடுகள் (2004 - 2009)


ஆண்டுமுதலீடு  (ரூ.மில்)
2004213.00
2005500.00
20061,800.00
20073,082.00
20084,000.00
20093,000.00

பணிகள் நிறைவு செய்யப்பட்ட வீதிகளின் நீளம் (கி.மீ) 2004 - 2009


பணிகள் நிறைவு செய்யப்பட்ட வீதிகளின் நீளம் (கி.மீ)

ஆண்டுமெட்டலிடலும் பயிற்சியும்  சிறு கற்கள் பரவல்மோட்டார் தரம்பிரித்தல்மண் வேலைகள்கான்க்றீட்டுதல்அடைப்புக்களைக் கொண்டு செப்பனிடுதல் மொத்த நீளம் 
2004304.5295.5600.00
2005381.29329.0421.05731.38
2006909.841,012.9383.96277.252,283.98
2007240.53184.37776.931,201.83
200899.55478.04181.59881.301,640.48
2009223.06559.74638.8154.72519.880.621,996.83

நிர்மாணிக்கப்பட்ட நிர்மாணங்கள்  2004 - 2009


ஆண்டு
நிர்மாணிக்கப்பட்ட நிர்மாணங்கள் 
பக்க வடிகாலமைப்புகள் (கிமீ)தடுப்புச் சுவர்கள் (மீ2) பாறை வெடிப்பித்தலும் அகற்றல்களும் (மீ3)பாலங்கள் (எண்.கை)மேன்பாலங்கள் (எண்.கை)மதகுகள் (எண்.கை)நீர் மார்க்கங்கள் (எண்.கை)
2005216.956.20325.7521825
2006250.861,558.86191.221934058
200728.95210.1410.0016420376
200834.01341.1016.005628915
2009140.992,320.65581.055127429

உள்ளகப் பூட்டுக் கான்க்றீட்டு அடைப்புகளை இடுவதன் மூலம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல்

2010 ஆம் ஆண்டில் புதிய ஒரு எண்ணமாக, பயன்பாட்டுச் சேவை ஒன்றை நிலைநாட்டிய பின்னரும் இலகுவான பராமரிப்பின் நிமித்தமும் அதே நேரம் மூலப்பொருட்களின் தரத்தைப் பேணும் நிமித்தமும் முன்கூட்டி வார்த்தெடுத்த கான்க்றீட்டு அடைப்புகளை இட்டு கிராமிய வீதிகளை நிர்மாணிக்கும் பணி ஊக்குவிக்கப் பட்டது. முன்கூட்டி வார்த்தெடுத்த கான்க்றீட்டு அடைப்புகளின் உற்பத்தியையும், அத்தகைய அடைப்புகளை உற்பத்தி செய்கின்ற இயந்திரங்களின் பயன்பாட்டையும் துரிதப்படுத்தும் விடயமும் ஊக்குவிக்கப் பட்டது. எவ்வாறு அறிவது என்ற தேவையான தொழில் நுட்பமும் பெருந்தெருக்கள் அமைச்சின் ஊடாக உரிய நிறுவனங்களுக்குக் கிட்டும் வகையில் பரப்பப்பட்டது. வீதியைச் செப்பனிடுவதற்குப் பயன்படும் முன்கூட்டி வார்த்தெடுத்த கான்க்றீட்டு அடைப்புகளுக்கு மிகப் பெரிய ஒரு கேள்வி நிலவியதால், வீதி செப்பனிடுவதற்குப் பயன்படும் முன்கூட்டி வார்த்தெடுத்த கான்க்றீட்டு அடைப்புகளை அங்கீகரிக்கப்பட்ட தரத்தை அனுசரித்து உற்பத்தி செய்து பிராந்திய மட்டத்தில் நியாயமான ஒரு விலையில் விநியோகிக்கும் சிறப்புப் பணியும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒப்படைக்கப்பட்டது.

முதலீடு - 2010 - 2013


ஆண்டுமுதலீடு
(ரூ.மில்.)
20103,000.00
20113,640.00
20125000.00
20136,000.00

பணிகள் நிறைவு செய்யப்பட்ட வீதிகளின் நீளம் (கி.மீ) 2010 - 2013


பணிகள் நிறைவு செய்யப்பட்ட வீதிகளின் நீளம் (கி.மீ)
ஆண்டுமெட்டலிடலும் பயிற்சியும் சிறு கற்கள் பரவல் மோட்டார் தரம்பிரித்தல்மண் வேலைகள்கான்க்றீட்டுதல்அடைப்புக்களைக் கொண்டு செப்பனிடுதல்மொத்த நீளம் 
2010108.72265.9555.7142.05211.35170.76854.54
2011
7.832.16-0.602.44540.27553.30
20120.18--4.970.18629.38635.38
2013 (2013.12.31 இற்கு)-----638.99638.99

நிர்மாணிக்கப்பட்ட நிர்மாணங்கள்  2010 - 2013


ஆண்டு 

நிர்மாணிக்கப்பட்ட நிர்மாணங்கள்

பக்க வடிகாலமைப்புகள் (கிமீ)தடுப்புச் சுவர்கள் (மீ2)பாறை வெடிப்பித்தலும் அகற்றல்களும் (மீ3)பாலங்கள் (எண்.கை)மேன்
பாலங்கள் (எண்.கை)
மதகுகள் (எண்.கை) நீர் மார்க்கங்கள்
201070.515,152.80229.045511,00319
201115.2912,998.200.0358-1,84331
201220.807,826.760.5093-1,11229
2013
(2013.12.31 இற்கு)
3.503827.64-30-17826

No comments:

Post a Comment