Popular Posts

Saturday, February 22, 2014

இலங்கையின் பொருளாதாரம் (Economy of Sri Lanka) பெருந்தோட்டப் பயிர்செய்கைகளான தேயிலைஇரப்பர்,கொக்கோகிராம்பு போன்றவையே பிரதான வருவாயாக விளங்கியது. அண்மைக் காலங்களில் பெருந்தோட்டங்கள் சிங்கள மக்களுக்கு குடியேற்ற கிராமங்களாக பிரித்துக்கொடுக்கப்பட்டதனால், அவ்வருமானம் வீழ்ச்சியடைந்ததுடன், தற்போது இலங்கையின் பிரதான வருமானமாக வெளிநாட்டு பணியாளர்கள் ஊடாகவே கிட்டப்படுகின்றது. குறிப்பாக மத்திய கிழக்காசிய நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களாக பணிப்புரிவோரின் ஊடாகவே பெறப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.[7] அதனைத்தவிர சுற்றுலாதேயிலைபுடவை போன்றவற்றில் இருந்து கணிசமான வருவாய் கிட்டுகின்றன. தற்போது இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் தமது குடும்பத்தாருக்கு உதவி வரும் நிதி போன்றனவும் இலங்கைக்கான ஒரு வருவாய் மார்க்கமாகவே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் பொருளாதாரத்தில் செழிப்பான நிலையில் இருப்பதனால், மீண்டும் இலங்கைத் திரும்பி தமது வணிக நடவடிக்கைகளைத் தொடரவும் அழைப்பு விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார வரலாறு

பழங்காலம் முதலே ஒன்பது இரத்தினங்கள்யானைத் தந்தம்முத்துகள் போன்ற பொருட்களுக்குப் புகழ்பெற்றஇலங்கைகுடியேற்ற காலத்தில் கறுவாதேயிலைஇறப்பர்தென்னை போன்ற வர்த்தகப் பயிர்களுக்கு பெயர் பெற்று விளங்கியது. இலங்கைக்கு 1948யில் விடுதலை பெற்ற பின்னர், முதலாளித்துவ பொருளாதாரத்தைப் பின்பற்றிய போதிலும் அது ஆசியாவிலே மிக முன்னேற்றகரமான பற்பல சமூகநல நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. ஆனால்1956 ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் முழுக்க முழுக்க சமவுடமை பொருளாதாரத்தையேகைக்கொள்ளத்தொடங்கியது. 1977மாம் ஆண்டுக்குப் பின்னர், தனியார்மயப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதுடன், சந்தைப் பொருளாதாரக் கொள்கையையும், ஏற்றுமதி சார்ந்த வர்த்தகத்தையும் நோக்கி நகர்ந்துள்ளது. தற்போது மிகை இயங்குநிலையிலுள்ள துறைகளாவன, உணவுப்பொருள் உற்பத்தி, ஆடை உற்பத்தி, உணவும் குடிவகைகளும்,தொலைத் தொடர்புகாப்புறுதிவங்கித் துறைகளாகும். 1996 அளவில், பெருந்தோட்டப் பயிர்கள் எற்றுமதியில் 20% ஐ மட்டுமே கொண்டிருந்தன (1970 இல் 93%), அதே நேரம் ஆடைகள் ஏற்றுமதியின் 63% ஆக இருந்தது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), 1990களில் சராசரியாக 5.5% ஆண்டு வளர்ச்சியைப் பெற்றது. வறட்சியும், சீர்கெட்டுவந்த பாதுகாப்பு நிலையும், 1996இல் வளர்ச்சியை 3.8% க்குத் தாழ்த்தும் வரை இது நீடித்தது. 1997-2000காலப்பகுதியில், சராசரி 5.3% வளர்ச்சியோடு கூடிய பொருளாதார மீட்சி காணப்பட்டதெனினும், மின்சாரப் பற்றாக்குறை, வரவுசெலவுப் பிரச்சினைகள், உலகப் பொருளாதார மந்த நிலை, மற்றும் தொடர்ந்து வந்த உள்நாட்டுக் குழப்பங்கள் என்பவற்றால், 2001ல் வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ஒரு பொருளாதார ஒடுக்கத்தைக் காண நேர்ந்தது. எனினும் 2001 ல், கையெழுத்து இடப்பட்ட, இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகள் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாகப் பொருளாதாரம் தேறி வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கொழும்பு பங்குச் சந்தை 2003ல் ஆசியாவிலேயே ஆகக் கூடிய வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது. தற்போது,தென்னாசியாவிலுள்ள முக்கிய நாடுகளிடையே அதிக தனி நபர் வருமானத்தைக் கொண்ட நாடு இலங்கையாகும்.

வெளிநாட்டு பணியாளர் ஊடான வருவாய்[தொகு]

தற்போது வெளிநாட்டு பணியாளர் ஊடான வருவாயே இலங்கை பொருளாதாரத்தின் பிரதான அங்கமாகியுள்ளது. கல்வி கற்காதோர் முதல், உயர் தரம் கற்றோர் வரை ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் எளிதாக தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு துறையாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைந்துள்ளப் படியால், பெரும்பாலானோரின் தெரிவு வெளிநாட்டு வேலை வாய்ப்பாகவே மாறி வருகின்றது. உள்நாட்டில் தொழில் புரிவோரும் அத்தொழில்கள் ஊடாக போதிய வருவாயை ஈட்ட முடியாத நிலையும், இலங்கையில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் விலைவாசி அதிகரிப்பிற்கு முகம் கொடுக்க முடியாத நிலையும் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமுகமாக இலங்கை சமூகம் மாற்றமாகி வருகிறது. இந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பில் பெரும்பாலானோர் வீட்டுப் பணியாளர்களாகவே தொழில் புரிகின்றனர். மத்தியக் கிழக்காசிய நாடுகளில் இலட்சக் கணக்காணோர் வீட்டு பணியாளர்களாகவே தொழில் புரிகின்றனர். மத்திய கிழக்காசிய நாடுகளைத் தவிர உலகின் பலவேறு நாடுகளிலும் வீட்டுப் பணியாளர்களாக இலங்கையர் தொழில் புரிகின்றனர். இவ்வாறான வெளிநாட்டு வேலை வாய்ப்பின் ஊடாகவே தற்போதைய இலங்கையின் பிரதான பொருளாதாரம் ஈட்டப்படுகின்றது.

வடக்கிழக்கு மக்கள்[தொகு]

2009ம் ஆண்டுக்கு முன்பு இலங்கையின் உள்நாட்டுப் போர் நடைப்பெற்று வந்த வடக்கிழக்கு பகுதிகளைத் தவிர்ந்த ஏனையப் பகுதிகளில் வாழும் மக்கள் மட்டுமே வெளிநாட்டு பணியாளர்களாக அதிகம் இருந்தனர். தற்போது வட கிழக்கு மக்களும் இலங்கையின் வருவாயை ஈட்ட போதுமான தொழில் வாய்ப்பு இல்லாமையாலும், இலங்கையில் செலவீனங்களுக்கு முகம் கொடுக்க முடியாமையினாலும் வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது. அரசாங்கமும் வெளிநாடுகளுக்கு சென்று பணிப்புரிவதன் ஊடாக கிட்டும் வருவாயை கவனத்தில் கொண்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்பையே ஊக்குவித்து பொருளாதாரத்தை ஈட்டி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.                                                        uthiweb.blogspot.com

மக நெகும’ கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்


இலங்கையின் முழு வீதிகள் வலையமைப்பிலிருந்து வருகின்ற 72% வீதமான வீதிகள் கிராமிய வீதிகளாகும். அரசியலமைப்புக்கான 13-வது திருத்தம்1987 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், 2004 ஆம் ஆண்டு வரை மத்திய அரசாங்கத்தினால் நிதியிடப்பட்ட தனியான ஒரு கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் இருக்கவில்லை. 2004 ஆம் ஆண்டில், 213 மில்லியன் ரூபாய் நிதி ஒரு முன்னோடிக் கருத் திட்டத்தின் கீழ் முதலிடப் பட்டிருந்தது. 2005 ஆம் ஆண்டில் கிராமிய வீதிகளின் அபிவிருத்தியின் நிமித்தம் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் பொது வரவு செலவு திட்டத்தின் மூலம் நிதிகளை ஒதுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.


மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் அன்று கௌரவப் பிரதம மந்திரியாகவும் கௌரவ நெடுஞ்சாலைகள் விடய அமைச்சராகவும் தொழிற்பட்ட நேரத்தில் இந்த ‘மக நெகும நிகழ்ச்சி திட்டம்’ 2004 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்டது. இந்த நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், வீதி அபிவிருத்தி அதிகார சபையினது (வீ.அ.அ.ச) நேரடித் தொழிலாளர் படையினூடாக அல்லது கிராம மக்களின் வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்தும் சமுதாய மைய அமைப்புகளின் பங்களிப்பைக் கொண்டு அநேகமான கிராமிய வீதிகள் வாகனங்கள் செல்லக் கூடிய அளவுக்கு சிறந்த முறையில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

கிராமிய வீதி அபிவிருத்திற்கான முதலீடுகள் (2004 - 2009)


ஆண்டுமுதலீடு  (ரூ.மில்)
2004213.00
2005500.00
20061,800.00
20073,082.00
20084,000.00
20093,000.00

பணிகள் நிறைவு செய்யப்பட்ட வீதிகளின் நீளம் (கி.மீ) 2004 - 2009


பணிகள் நிறைவு செய்யப்பட்ட வீதிகளின் நீளம் (கி.மீ)

ஆண்டுமெட்டலிடலும் பயிற்சியும்  சிறு கற்கள் பரவல்மோட்டார் தரம்பிரித்தல்மண் வேலைகள்கான்க்றீட்டுதல்அடைப்புக்களைக் கொண்டு செப்பனிடுதல் மொத்த நீளம் 
2004304.5295.5600.00
2005381.29329.0421.05731.38
2006909.841,012.9383.96277.252,283.98
2007240.53184.37776.931,201.83
200899.55478.04181.59881.301,640.48
2009223.06559.74638.8154.72519.880.621,996.83

நிர்மாணிக்கப்பட்ட நிர்மாணங்கள்  2004 - 2009


ஆண்டு
நிர்மாணிக்கப்பட்ட நிர்மாணங்கள் 
பக்க வடிகாலமைப்புகள் (கிமீ)தடுப்புச் சுவர்கள் (மீ2) பாறை வெடிப்பித்தலும் அகற்றல்களும் (மீ3)பாலங்கள் (எண்.கை)மேன்பாலங்கள் (எண்.கை)மதகுகள் (எண்.கை)நீர் மார்க்கங்கள் (எண்.கை)
2005216.956.20325.7521825
2006250.861,558.86191.221934058
200728.95210.1410.0016420376
200834.01341.1016.005628915
2009140.992,320.65581.055127429

உள்ளகப் பூட்டுக் கான்க்றீட்டு அடைப்புகளை இடுவதன் மூலம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல்

2010 ஆம் ஆண்டில் புதிய ஒரு எண்ணமாக, பயன்பாட்டுச் சேவை ஒன்றை நிலைநாட்டிய பின்னரும் இலகுவான பராமரிப்பின் நிமித்தமும் அதே நேரம் மூலப்பொருட்களின் தரத்தைப் பேணும் நிமித்தமும் முன்கூட்டி வார்த்தெடுத்த கான்க்றீட்டு அடைப்புகளை இட்டு கிராமிய வீதிகளை நிர்மாணிக்கும் பணி ஊக்குவிக்கப் பட்டது. முன்கூட்டி வார்த்தெடுத்த கான்க்றீட்டு அடைப்புகளின் உற்பத்தியையும், அத்தகைய அடைப்புகளை உற்பத்தி செய்கின்ற இயந்திரங்களின் பயன்பாட்டையும் துரிதப்படுத்தும் விடயமும் ஊக்குவிக்கப் பட்டது. எவ்வாறு அறிவது என்ற தேவையான தொழில் நுட்பமும் பெருந்தெருக்கள் அமைச்சின் ஊடாக உரிய நிறுவனங்களுக்குக் கிட்டும் வகையில் பரப்பப்பட்டது. வீதியைச் செப்பனிடுவதற்குப் பயன்படும் முன்கூட்டி வார்த்தெடுத்த கான்க்றீட்டு அடைப்புகளுக்கு மிகப் பெரிய ஒரு கேள்வி நிலவியதால், வீதி செப்பனிடுவதற்குப் பயன்படும் முன்கூட்டி வார்த்தெடுத்த கான்க்றீட்டு அடைப்புகளை அங்கீகரிக்கப்பட்ட தரத்தை அனுசரித்து உற்பத்தி செய்து பிராந்திய மட்டத்தில் நியாயமான ஒரு விலையில் விநியோகிக்கும் சிறப்புப் பணியும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒப்படைக்கப்பட்டது.

முதலீடு - 2010 - 2013


ஆண்டுமுதலீடு
(ரூ.மில்.)
20103,000.00
20113,640.00
20125000.00
20136,000.00

பணிகள் நிறைவு செய்யப்பட்ட வீதிகளின் நீளம் (கி.மீ) 2010 - 2013


பணிகள் நிறைவு செய்யப்பட்ட வீதிகளின் நீளம் (கி.மீ)
ஆண்டுமெட்டலிடலும் பயிற்சியும் சிறு கற்கள் பரவல் மோட்டார் தரம்பிரித்தல்மண் வேலைகள்கான்க்றீட்டுதல்அடைப்புக்களைக் கொண்டு செப்பனிடுதல்மொத்த நீளம் 
2010108.72265.9555.7142.05211.35170.76854.54
2011
7.832.16-0.602.44540.27553.30
20120.18--4.970.18629.38635.38
2013 (2013.12.31 இற்கு)-----638.99638.99

நிர்மாணிக்கப்பட்ட நிர்மாணங்கள்  2010 - 2013


ஆண்டு 

நிர்மாணிக்கப்பட்ட நிர்மாணங்கள்

பக்க வடிகாலமைப்புகள் (கிமீ)தடுப்புச் சுவர்கள் (மீ2)பாறை வெடிப்பித்தலும் அகற்றல்களும் (மீ3)பாலங்கள் (எண்.கை)மேன்
பாலங்கள் (எண்.கை)
மதகுகள் (எண்.கை) நீர் மார்க்கங்கள்
201070.515,152.80229.045511,00319
201115.2912,998.200.0358-1,84331
201220.807,826.760.5093-1,11229
2013
(2013.12.31 இற்கு)
3.503827.64-30-17826